இந்த 3 காரியம் மற்றும் செஞ்சா…. ஆடி அமாவாசையில் நம்ம வீட்டுக்கு நன்மை வரும்

ஆடி அமாவாசை என்பது ஆன்மிகத்திற்கும் பித்ரு வழிபாடு இருக்கும் மிக முக்கிய நாளாகும். இந்த நாளில் சில முக்கிய காரியங்களை வீட்டிலோ அல்லது வழிபாட்டு தலங்கள் போன்ற இடங்களில் செய்யும் பொழுது நம் வீட்டுக்கு நன்மை தரும். மேலும் அந்த ஆன்மீக முக்கிய செயல்களை எந்த நேரத்தில் எப்படி எல்லாம் செய்யலாம் என்பதை தெளிவாக பார்க்கலாம்.

ஆடி மாதம்  ஏன் நல்லது

பொதுவாக ஆடி மாதம் தமிழ் மாதங்களில் எந்த மாதத்திலும் இல்லாத அளவிற்கு ஆன்மீகம் நிறைந்த மாதமாகும். குறிப்பாக ஆடி அமாவாசை, ஆடி கிருத்திகை, ஆடி வெள்ளி மற்றும் செவ்வாய் எந்த நாட்களில் பெண்கள் விரதம் இருந்து வழிபடுவது குடும்ப அமைதிக்கும் உடல் நலத்திற்கும் மிகவும் முக்கியம்.  ஆடி அமாவாசை என்பது தமிழர்களின் பாரம்பரிய ஆன்மீக நாளாக கருதப்படுகிறது.

 ஆடி அமாவாசை யார் யாருக்கு நல்லது

aadi-amavasai-enna neram
aadi-amavasai-enna neram

கிட்டத்தட்ட ஆடி மாதம் மற்றும் ஆடி அமாவாசை   5 ராசிகளுக்கு மிக அதிர்ஷ்டமும் அனுகூலமும் தரும் ராசிகள்.

மேஷம்-புதிய வாய்ப்புகள் மற்றும் தொழிலில் வளர்ச்சி

மிதுனம்-மன நிம்மதி உடன் கூடிய குடும்ப  நலன்

சிம்மம்-பணவரவு ஆன்மீகத்தில் நற்பண்புகள்

 தனுசு-வருமானம் அதிகரிக்கும் பயணங்களும் அதிகரிக்கும்

மீனம்- குடும்ப மன அமைதி மற்றும் புத்துணர்ச்சி கிடைக்கும்

 

1.தர்ப்பணம் செய்தல்

ஆடி அமாவாசை என்பது முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்வது மிகவும் முக்கியம்.  இறந்தவர்களுக்கு தர்ப்பணம் செய்து ஆத்மாக்களை சாந்தி அளிக்கும் ஒரு நல்ல நாள் தான் இந்த அமாவாசை. தர்ப்பணம் செய்வது மூலமாக பித்ரு தோஷம் நீங்கி இறந்தவர்களின்  ஆசைகள் அனைத்தும் நிறைவேறவும் அதன் மூலம் குடும்பங்கள் மன அமைதி நிலவுவதற்கும் இதை செய்ய வேண்டும். பொதுவாக தட்ப பயணத்திற்கு அருகில் புண்ணிய நீராடும் இடங்களிலோ அல்லது கோவில், ஆற்ற கரை போன்ற இடங்களில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்வது மிகவும் முக்கியம்..

2.கடலில் நீராடல்

ஆடி அமாவாசைக்கு  அதிகமான மக்கள் கடலோரம் சென்று நீராடுவது வழக்கம். இது எதற்காக செய்கின்றன இப்படி செய்தல் என்ன மாதிரியான நன்மைகள் நமக்கு வந்து சேரும் என்பதை தெரிந்து அதை நாம் செய்ய வேண்டும். இது கடலிலோ அல்லது ஏரி ஓடும்  நீரில் செய்வது மிக முக்கியம். குறிப்பாக கடலில் புனித நீராடுவது நாம் செய்த பாவங்கள் அனைத்தும் நீங்கி மகிழ்ச்சியான தருணத்தை  உருவாக்கிட புனித நீராட வேண்டும். இது குறிப்பாக ஆடி அமாவாசை காலை வேலைகளில் நீராடுவது தான் சிறந்தது.

3.தானம் மற்றும் தரிசனம்

இருப்பவர்களிடமிருந்து இல்லாதவர்களுக்கு கொடுப்பதை தானம். அதை குறிப்பாக இந்த நல் நாளில் செய்வது மிகப்பெரிய ஒரு நன்மையை நமக்கு ஏற்படுத்திக் கொடுக்கும் தேவார சாலைகள் மற்றும் ஆலயங்களில் தரிசனம் செய்வது மிகவும் மகிமை உண்டாக்கும். இதில் அன்னதானம், துணி தானம், மற்றும் பணதானம் ஆகியவையும் அடங்கும். கண்டிப்பாக ஏழை எளியவருக்கு செய்யுங்கள். இது நம் முன்னோர்கள் செய்த தவறுகளையும் கூட மன்னித்து நம் வாழ்க்கையை சிறப்படைய செய்து புண்ணியத்தை கொண்டு வந்து சேர்க்கும்.

புண்ணியம் என்பது நம் வாழ்க்கை மாற்றக் கூடிய ஒரு வாய்ப்பு. அந்த ஒரு நாளை ஆடி அமாவாசையில் செய்வது உங்களுக்கு பெரும் பாக்கியம்.

பித்ரு தோஷம் வழிபாடு

பித்ருக்களை வழிபடுவது குடும்பத்தில் பிரச்சனை, திருமண தடை, வேலையின்மை மற்றும் சுகாதார போன்றவற்றுக்கு  வழி வகுத்து வாழ்க்கையை மேம்படுத்த  பித்ருக்களை வழிபட வேண்டும்.

வீட்டில் செய்யக்கூடிய ஆன்மீக காரியங்கள்

aadi-amavasai- samiyal
aadi-amavasai- samiyal
  •  முன்னோர்களை நினைத்து குடும்ப நலத்தையும் பேணிக்காக வேண்டும் என நினைத்து   நெய் தீபம் அல்லது விளக்கு ஏற்றுவது மிகவும் சிறந்தது.
  •  துளசி மாலை தரிசனம்
  •  சித்தர்களுக்கு அன்னதானம் செய்வது இந்த ஆன்மீக காரியங்கள் ஆடி அமாவாசை இந்த நல் நாளில் செய்யலாம்.

ஆடி அமாவாசையில் செல்லக்கூடிய தீர்த்த தளங்கள்

பொதுவாக தமிழ்நாட்டில் அதிகமான மக்கள் ஆடி அமாவாசையில் நீராடக் கூடிய இடமாக சில இடங்கள் கருதப்படுகிறது.

  1. ராமேஸ்வரம்
  2. திருச்செந்தூர்
  3. மாமல்லபுரம்
  4. காரைக்கால்
  5. வேதாரண்யம்
  6. ஒகேனக்கல்

ஆடி அமாவாசையில் கடலில்  நீராட நேரம் என்ன

புண்ணிய காலம்  தர்ப்பணம், புனித நீராடல் போன்றவற்றிற்கு மிக முக்கிய நேரங்கள் உள்ளது,. அந்த நேரத்தை தவிர மற்ற நேரங்களில்  நீராடுவதை தவிர்க்கலாம்.

துவங்கும் நேரம் காலை 6 மணி முதல், மற்றும் மதியம் 1230 மணியளவில் முடிப்பது சிறந்தது. காரணம் அமாவாசை திதி பூரண சக்தி உடன் இருக்கும் நேரம் தான் அவை இந்த நேரத்தில்  தர்ப்பணம்,புனித நீராடல் மிகவும் முக்கியம்.

 

குறிப்பு:மேற்கண்ட அனைத்தும் மிகவும் பக்தியுடனும் நம்பிக்கையுடனும் ஆடி அமாவாசை செய்து வந்தால் உங்களுக்கு நல்லதே நடக்கும் என்பது ஐதீகம்.

நீங்க இதுக்கு  முன்னாடி எந்த ஊருக்கெல்லாம் போவீங்க?

Leave a Comment