பணமும் பதவியும் வேண்டாம்…. நாட்டு வளர்ச்சி வேண்டும்.. கர்மவீரர் காமராஜ் பிறந்தநாள்

ஒவ்வொரு வருடமும் ஜூலை 15ஆம் தேதி கல்விக்கு கண் திறந்த கர்மவீரர் காமராஜர் ஐயா உடைய பிறந்தநாளை தமிழ்நாடு மட்டுமல்லாமல் உலகெங்கும்  கொண்டாடி வருகின்றனர். அவர் இருந்தாலும் இல்லாவிட்டாலும் அவர் தொடங்கிய பல திட்டங்கள் இன்று மக்களுக்கு வேறு எந்த தலைவர்களாலும் கொடுக்க முடியாத திட்டங்களாக செயல்பட்டுக் கொண்டிருக்கின்றது.

வீரரின் தொடக்கம்

kamarajar-speech
kamarajar-speech

1903 ஆம் ஆண்டு ஜூலை 15ஆம் தேதி விருதுநகரில் மாவட்டத்தில் கர்மவீரர் காமராஜர் பிறந்தார். சிறுவயதிலேயே பள்ளி கல்வி இடைநிறுத்தம் ஏற்பட்டாலும் அரசியலில் மிகவும் ஆர்வம் காட்டி அரசியலில் தனது வாழ்க்கையை தொடங்கியவர். எளிமைக்கு சொந்தக்காரனான காமராசர் தன் வாழ்நாள் முழுவதும் சட்டை வேஷ்டி கம்பளி இவைதான் இவருடைய அடையாளமே. இவரே மாறி எந்த விதமான அரசியல்வாதியும் இவ்வளவு எளிமையாக இருந்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

கல்விக்காக இவரின் சாதனை

இவருக்கு பல பெயர்கள் இருந்தாலும் கல்விக்கு கண் திறந்த காமராசர் என்ற பெயர்தான் மிகவும் சிறந்தது. காரணம் இவர் இலவச கல்வி, மதிய உணவு திட்டம், போன்றவை தான் இவருக்கு அரசு  பள்ளிகளில் வளர்ச்சியை  ஏற்படுத்தி , குறைந்தபட்சம் மதிய உணவிற்காகவாவது பள்ளிக்கு குழந்தைகள் வரவேண்டும் என்ற உன்னதமான மனப்பான்மை கொண்ட முதல்வர்தான் கர்மவீரர் காமராஜர்.

பள்ளிக்கு செல்ல முடியாமல் இருந்த ஏராளமான குழந்தைகளுக்கு இவருடைய திட்டம் மூலமாக பள்ளிக்கு வர வைத்து அவர்களுக்கும் கல்வியை கொடுக்கும் திட்டமாக இருந்தது.

அரசியலும் காமராஜரும்…

பொதுவாக இவரைப் பற்றி நம் அதிகமாக தெரியவிட்டாலும் இவருடைய திரைப்படம் இவரைப் பற்றி மேலும் ஆச்சிரமூட்டும் சில விஷயங்களை நமக்கு தெரியப்படுத்தும். அந்த வகையில் இவர் மிக எளிமையான அரசியல்வாதியும் கூட, 1940 இவருக்கு அரசியலில் மிகப்பெரிய ஒரு மாற்றத்தை ஏற்படுத்தியது. 1954 -95 ஆண்டு வரை இவர் முதல்வராக தமிழகத்தில் அரசியலில் நீடித்தார். படித்தவர்களும், பணக்காரர்கள் மட்டுமே அரசியலுக்கு வர முடியும் என்ற ஒரு எண்ணத்தை மாற்றி அமைத்தவர் காமராஜர்.

பதவிக்காகவும், பணத்திற்காகவும் மட்டுமல்லாமல் நாட்டு மக்களுக்காக அயராத உழைத்த கருமை வீரர் காமராசர் பிறந்த நாளை நம் இன்று மட்டுமல்லாமல் என்றென்றும் போட்டிடுவோம்.

Leave a Comment